Monday, December 29, 2025 12:33 pm
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 2545 வீதி விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் 2692 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்கள் 272 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரழப்புக்களின் எண்ணிக்கை 317 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

