Monday, December 29, 2025 10:02 am
டித்வா புயலினால் பாதிக்கப்பட்டு போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த பதுளை – ஸ்பிரிங்வெலி வீதியின் பாலத்திற்குப் பதிலாக, தற்காலிகமாக அமைக்கப்படும் பெய்லி பாலம் (Bailey Bridge) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) சொந்தமான இந்த வீதியானது மக்களின் அன்றாடத் தேவைகளுக்கும், தோட்டத்துறையின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் மிக முக்கியமான ஒரு பாதையாக காணப்படுகின்றது.
டித்வா புயலினால் இந்தப் பாலம் பலத்த சேதமடைந்து முற்றாக அழிவடைந்திருந்தது. இதனால் அப்பகுதிக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருந்தன.
இந்நிலையில், பெய்லி பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகளை மிக விரைவாக நிறைவு செய்து மக்களின் பாவனைக்காகவும், வாகனப் போக்குவரத்திற்காகவும் பாலத்தைத் திறந்துவிட வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.


