Saturday, December 27, 2025 11:50 am
நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சனிக்கிழமை கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இராணுவத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி பாதாள உலகக் குழு குற்றவாளி ஒருவரிடம் இருந்தமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின்படி அவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பாதாள உலகக் குழு தலைவனான “மாகந்துரே மதூஷிடம்” நடத்தப்பட்ட விசாரணைகளின் போது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது.

