Saturday, December 27, 2025 10:47 am
2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மலேசியாவில் பிரதமராக பதவி வகித்த நஜிப் ரசாகிற்கு பணமோசடி குற்றச்சாட்டில் 15வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நஜிப் ரசாக் தன் பதவிக்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து மலேசியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம்’ என்ற அரசு நிறுவனத்தை தொடங்கினார்.
இந்நிறுவனத்தின் நிதியில் இருந்து 543 மில்லியன் டொலர் நிதியை தன் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு ரசாக் மாற்றியதாக புகார் எழுந்தது.
அவர்மீது அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நஜிப் ரசாக் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன், 15 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது.
ஏற்கனவே மற்றொரு வழக்கில் நஜிப் ரசாக் 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

