Wednesday, December 24, 2025 2:16 pm
தையிட்டி விவகாரம் குறித்து பருத்தித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ் தலைமையில் இன்று புதன்கிழமை ஆரம்பமானது.
இந்த அமர்வில் 2026ஆம் ஆண்டுக்கான நடமாடும் சேவைகளுக்கான அனுமதி, வாகன திருத்தங்களுக்கான அனுமதிகள், மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தையிட்டியில் அமைதிவழி ஆர்ப்பாட்டத்தின் போது வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கு அமர்வில் எதிர்ப்பு தெரிவித்து கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

