Wednesday, December 24, 2025 12:36 pm
பருத்தித்துறை – இன்பர்சிட்டி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் குறித்த பகுதியில் கரையொதுங்கிய நிலையில் அப்பகுதி மீனவர்களால் அவதானிக்கப்பட்டது.
நீல நிற காற்சட்டை மற்றும் பட்டர் நிற ரி-சேர்ட் அணிந்த நிலையில் காணப்படும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

