Monday, December 22, 2025 12:31 pm
சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் பெண் ஒருவர் முதல்முறையாக விண்வெளிக்கு சென்று சாதனை படைத்துள்ளார்.
தற்போது சுற்றுலாவிற்காக விண்வெளிக்கு மக்கள் சென்று வரும் நிலைமை உருவாகியுள்ளது.
அமேசான் நிறுவனர் ஜெப் பெஸாஸ்க்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்கின்றது.
இந்த பயணத்தில் முதல் முறையாக சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் பெண் ஒருவர் விண்வெளிக்கு சென்று சாதனை படைத்துள்ளார்.

ஜேர்மனியை சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA) பொறியாளரான 33 வயதான மைக்கேலா பென்தாஸ் (Michaela Benthaus) விண்வெளிக்கு புறப்பட்ட ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில் பயணம் செய்துள்ளார்.
26 வயதில் இடம்பெற்ற இருசக்கர வாகன மோட்டர் விபத்தில் முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக மைக்கேலா பென்தாஸ் தற்போது வரை சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 20ஆம் திகதி ப்ளூ ஆரிஜின் விண்கலம் சுமார் 100 கிலோமீட்டர் உயரத்தை தாண்டி கார்மன் கோடு என்று அழைக்கப்படும் விண்வெளியின் எல்லைக்கு சற்று மேலே சென்றது.
பயணத்தின் ஒரு பகுதியாக பயணிகள் சிறிது நேரம் எடையற்ற தன்மையை அனுபவித்தனர்.
இதன் மூலம் விண்வெளிக்கு சென்ற முதல் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் பெண் என்ற பெருமையை மைக்கேலா பென்தாஸ் பெற்றுள்ளார்.

