Monday, December 22, 2025 11:30 am
இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடை நகரில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் முகாமையாளர் ஒருவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இரண்டு போட்டி குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

