Monday, December 22, 2025 10:45 am
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 22 ஆண்டுகள் வாழ்ந்து வந்த வெள்ளைக் கை கொண்ட கிப்பன் குரங்கு உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிப்பன் குரங்கு அதன் பெண் துணையுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு செக் குடியரசில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது.
கடந்த டிசம்பர் 17 அன்று குறித்த குரங்கு நோய்வாய்ப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

