Monday, December 22, 2025 10:36 am
சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2025ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 347 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 345 ஆகும்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் சுமார் 66 சதவீதத்தினர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவே தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில் எகிப்து, பாகிஸ்தான் மற்றும் ஜோர்தான் நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர்.
மேலும் துருக்கி அல்-ஜாசர் என்ற பத்திரிகையாளர் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் தூக்கிலிடப்பட்டுள்ளார். இந்த விடயம் சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்றும், உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

