Wednesday, December 17, 2025 12:10 pm
வடக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மாகாண அலுவலகப் பணியாளர் சேவை (தரம் – III) வடக்கு மாகாண பொதுச்சேவையின், மாகாண அலுவலகப் பணியாளர் சேவையின் தரம் III இற்கான வெற்றிடங்கள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் நிரப்பப்படவுள்ளன.
பதவி: மாகாண அலுவலகப் பணியாளர் (தரம் III)
ஆட்சேர்ப்பு முறை: திறந்த போட்டிப் பரீட்சை
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.01.05
வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள துணை மருத்துவ சேவைப் பதவிகள் (ஒப்பந்த அடிப்படை) வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள அரச மருத்துவமனைகளில்; நிலவும் பின்வரும் துணை மருத்துவ சேவை பதவிகளுக்கான வெற்றிடங்கள் ஒப்பந்த அடிப்படையில், நேர்முகப்பரீட்சை மூலம் நிரப்பப்படவுள்ளன
கோரப்பட்டுள்ள பதவிகள்: மருந்துக் கலவையாளர் (Dispenser), இருதய துடிப்புப் பதிவாளர் (ECG Recordist), மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (MLT), மருந்தாளர் (Pharmacist), பௌதீக சிகிச்சையாளர் (Physiotherapist), கதிர்ப்படப்பிடிப்பாளர் (Radiographer)
ஆட்சேர்ப்பு முறை: நேர்முகப்பரீட்சை
விண்ணப்ப முடிவுத் திகதி: 2025.12.31
மேற்கூறிய இரண்டு பதவிகளுக்குமான முழுமையான வர்த்தமானி அறிவித்தல், தகைமைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை வடக்கு மாகாண இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
இணையத்தள முகவரி: www.np.gov.lk
செல்ல வேண்டிய வழிமுறை: www.np.gov.lk ️ Exams and Recruitments ️Advertisement ️ 2025 தகைமையுடைய விண்ணப்பதாரர்கள், விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, குறிப்பிடப்பட்ட இறுதித் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கோரியுள்ளார்.

