Tuesday, December 16, 2025 4:34 pm
பிபிசி (BBC) செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அமெரிக்க கேபிடல் கலவரத்திற்கு முன்னதாக 2021 ஜனவரி 6 அன்று ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் ஆற்றிய உரையினை , பிரிட்டிஷ் (British) ஒளிபரப்பாளர் திரிபுபடுத்தும் வகையில் கையாண்டதாகக் கூறி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மியாமியில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2024 அமெரிக்க தேர்தல் முடிவுகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி 2021 ஜனவரி 6 அன்று ட்ரம்ப் ஆற்றிய உரையைத் திருத்தி பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

