Saturday, December 13, 2025 3:07 pm
யாழ்ப்பாணம் குட்டியப்புலம் அ. த .க பாடசாலையில் தரம் 09 இல் கல்விகற்கும் மாணவி கருணா நதீனா, இளம் விவசாய விஞ்ஞானி போட்டியில் தங்க விருதினை பெற்றுக்கொண்டுள்ளார்.
கல்வியமைச்சு மற்றும் இலங்கை விஞ்ஞான வளர்ச்சி சங்கத்தின் ஒத்துழைப்புடன் மாணவர்களின் விஞ்ஞான மற்றும் விவசாய செயற்பாட்டு அறிவை மேம்படுத்தும் முகமாக இளம் விவசாய விஞ்ஞானி போட்டி நிகழ்ச்சித் திட்டத்தினை கடந்த 4 வருடமாக தேசிய ரீதியில் நடத்தி வருகிறது.
இந்தமுறை இடம்பெற்ற போட்டியில் தங்க விருதினை யாழ்ப்பாணம் குட்டியப்புலம் அ.த. க பாடசாலையில் தரம் 09 இல் கல்விகற்கும் செல்வி கருணா நதீனா பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட சிறிய பாடசாலையில் கல்விகற்கும் குறித்த மாணவியின் சாதனையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த 07ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தின் லோட்டஸ் அரங்கில் இடம்பெற்ற இலங்கை விஞ்ஞான வளர்ச்சி சங்கத்தின் 81 ஆவது வருடாந்த அமர்வில் இந்தவிருது வழங்கப்பட்டது.

