Tuesday, December 9, 2025 12:37 pm
வரவிருக்கும் ACC ஆண்கள் U19 ஆசிய கோப்பையில் (50 ஓவர்) பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் அறிக்கையின்படி குறித்த அணி நாளை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புறப்படவுள்ளது.
இலங்கை அணி நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் இணைந்து B குழுவில் இடம் பெற்றுள்ளது.
இந்த அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.


