Thursday, December 4, 2025 12:35 pm
இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பாதிப்பை அடுத்து, அந்த நாடுகளின் அரசாங்கங்களின் கோரிக்கைகளுக்கு இணங்க உடனடி மானிய உதவியை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது.
மோசமான வெள்ளத்தினால் ஏற்பட்ட துயரங்கள் குறித்து மிகவும் வருந்துவதாக தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இலங்கைக்கு 3 மில்லியன் டொலர்களும், தாய்லாந்துக்கு 2 மில்லியன் டொலர்களும், வியட்நாமுக்கு 2 மில்லியன் டொலர்களும் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மானியங்கள் ஆசிய பசிபிக் அனர்த்த துரித துலங்கல் நிதியத்தின் (APDRF) மூலம் வழங்கப்படுகின்றன. இந்த நிதி பாரிய இயற்கை அனர்த்தங்களுக்குப் பிறகு உடனடியாக உயிர்காக்கும் நோக்கங்களுக்காக, அபிவிருத்தி அடைந்து வரும் உறுப்பு நாடுகளுக்கு விரைவான மானியங்களை வழங்குகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

