Wednesday, December 3, 2025 2:57 pm
சிவனொளிபாத மலைக்கான யாத்திரை நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
கடந்த காலங்களில் சிவனொளிபாத மலைக்கான யாத்திரை தொடங்குவதற்கான சடங்குகள் இந்த முறையும் வழமைபோல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரழிவுகளால் நாடு எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையிலிருந்து விரைவில் மீளப் பிரார்த்தனை செய்து இந்த யாத்திரையின் அனைத்து சடங்குகளும் வழமை போல் செய்யப்படும் என இந்த நிகழ்விற்கு பொறுப்பாளரான நாயக்க தேரர் தெரிவித்தார்.

