Wednesday, December 3, 2025 11:23 am
நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்த நிலை காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கு தனது வேதனத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு திறைசேரி நிதி மட்டும் போதாது என ஜனாதிபதி கூறினார். அதனால் எனது அடுத்த மாத வேதனத்தை வீடமைப்பு பணிகளுக்காக வழங்க தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தேசிய மக்கள் மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 159 பேரினது வேதனங்களும் கட்சி நிதியத்தையே சென்றடைகிறது.
திறைசேரி நிதி மாத்திரம் நாட்டை கட்டியெழுப்ப போதாது என ஜனாதிபதி கூறும் நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் நிதியத்தில் உள்ள நிதியையும் வீடமைப்பு பணிகளுக்காக ஒதுக்க வேண்டும் என தாம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

