Wednesday, December 3, 2025 10:43 am
இலங்கைத்தீவை புரட்டிப்போட்ட அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று புதன்கிழமை காலை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலியைச் செலுத்தினர்.

எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க இதற்கான யோசனை முன்வைத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆசனங்களில் இருந்து எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலியைச் செலுத்தினர்.
இந்த இயற்கை பேரிடர் காரணமாக நாட்டில் 465பேர் உயிரிழந்ததுடன், சுமார் 336 பேர் காணாமல் போயுள்ளனர்.

