Tuesday, December 2, 2025 10:52 am
திருகோணமலை, சீனன்குடா பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சீனன்குடா – 5 ஆம் கட்டை பகுதியைச் சேரந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார்சைக்கிளில் பயணித்த அடையாளம் தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டள்ளதாகவும், உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

