Thursday, November 27, 2025 12:10 pm
நாட்டின் பல பகுதிகளிலும் நிலவி வருகின்ற சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் புதிய திகதிகள் வெளியாகியுள்ளன.
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று வியாழக்கிழமை மற்றும் நாளை நடைபெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சைகள் சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். பின்னர் சனிக்கிழமை நடைபெறவிருந்த பரீட்சையும் இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் புதிய பரீட்சைத் திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்திருந்த நிலையில், எதிர்வரும் டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

