Saturday, November 8, 2025 1:43 pm
இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடாத்தும், 2026ம் ஆண்டு T20 ஆண்களுக்கான உலகக் கிண்ணத் தொடர் குறித்து, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த போட்டிகள் இந்தியாவின் அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. இலங்கையில் கொழும்பு ஆர். பிரேமதாச மற்றும் பல்லேகல மைதானங்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை.
2026ம் ஆண்ட பெப்ரவரி மாதம் 7ம் திகதி ஆரம்பமாகும் இந்தப் போட்டி, மார்ச் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கிடையில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், இரு நாடுகளில் ஒரு நாடு போட்டி நடாத்தும் பட்சத்தில் மற்றைய நாடு நடுநிலை வகிக்கும் என்ற ஒப்பந்தத்தின் படி, பாகிஸ்தான் தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நேபாளம், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம், நமீபியா, சிம்பாப்வே உள்ளிட்ட 20 அணிகள் இந்த போட்டியில் விளையாடவுள்ளன.
போட்டி அட்டவணை பெரும்பாலும் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்பட வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

