Wednesday, November 5, 2025 12:26 pm
கென்டக்கியில் உள்ள விமான நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே யுபிஎஸ் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர்.
விமானம் ஹவாயில் உள்ள ஹொனலுலுவை நோக்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது, உள்ளூர் நேரப்படி மாலை 5.15 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் (FAA) தெரிவித்துள்ளது.
அந்த விமானம் மெக்டோனல் டக்ளஸ் எம்டி-11 விமானம் என்றும், இது முதன்மையாக சரக்கு விமான நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் விமானம் 38,000 கேலன் எரிபொருளை சுமந்து சென்றதாகவும், இந்த விபத்து இரண்டு கட்டிடங்களை மோதியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயை அணைக்க 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக லூயிஸ்வில் மேயர் கிரெய்க் க்ரீன்பெர்க் தெரிவித்தார்.

