Friday, October 31, 2025 12:39 pm
பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் இளைய சகோதரரான இளவரசர் எண்ட்ரூ, தனது யோர்க் டியூக் பதவியைத் துறந்ததையடுத்து, அவரது ‘இளவரசர்’ பட்டத்தை நீக்க பக்கிங்ஹாம் அரண்மனை நடவடிக்கை எடுத்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட சார்லஸ் மன்னர், இனிமேல் இளவரசர் எண்ட்ரூ, எண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்றே அழைக்கப்படுவார் என உத்தரவிட்டுள்ளார்.
‘இளவரசர்’ பட்டத்தை இழந்த எண்ட்ரூ இதனால், 2004 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வந்த வின்ட்சர் அரண்மனையை விட்டு வெளியேற நேரிடும்.
குழந்தைகள் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய உயிரிழந்த அமெரிக்கரான ஜெஃப்ரி எப்ஸ்டைன், உடன் தொடர்பு வைத்திருந்ததாக எண்ட்ரூ மீது பல ஆண்டுகளாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இதன் காரணமாக அவர் இந்த மாதம் இளவரசர் யோர்க் டியூக் பதவியைத் துறக்க நடவடிக்கை எடுத்தார்.


