Thursday, October 30, 2025 10:30 am
பிறந்து 3 மாதங்களோயான பெண் குழந்தை ஒன்று, பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.
கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த, பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தைக்கு தாயார் பாலூட்டிய நிலையில், சிறிது நேரத்தில் குறித்த குழந்தைக்கு மூக்காலும் வாயாலும் இரத்தம் வந்து குழந்தை மயங்கியுள்ளது. உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்ட போதும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

