Tuesday, October 28, 2025 1:47 pm
தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள, உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி, அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. அடுத்த உலக கோப்பை தொடர் 2034-ல் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியின் போது பயன்படுத்தப்படும் 15 மைதானங்களில் சவுதி அரேபியாயில் உள்ள நியோம் மைதானமும் ஒன்றாக காணப்படுகின்றது.
இது ஒரு ஸ்கை ஸ்டேடியம் ஆகும்.
இதன்மூலம் உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை, சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.
தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் உள்ள இந்த ஸ்டேடியத்தில், 46000 பார்வையாளர்கள் வரை இருக்கும் வசதி காணப்படும். இதன் கட்டுமானப் பணிகள் 2027-ல் தொடங்கி, உலகக் கோப்பை நடைபெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, 2032-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

