Tuesday, October 28, 2025 10:45 am
இந்தியாவில் நடைபெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில், பங்கேற்ற இலங்கை அணி வீரர்கள், இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
கடந்த 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை இந்தியாவின் ராஞ்சியில், தெற்காசிய பிராந்திய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற, 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில், 16 தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 40 பதக்கங்களை வென்று இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில் நாட்டை வந்தடைந்த இலங்கை அணி வீரர்களுக்கு, இலங்கை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில்குமார கமகே, முப்படைகளின் விளையாட்டுத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள் என பலரும் தமது உற்சாக வரவேற்பினை தெரிவித்திருந்தனர்.


