Monday, October 27, 2025 10:40 am
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனியார் ஹோட்டல் ஒன்றில் சந்திக்கவுள்ளார்.
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்திற்குப் பின்னர், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று திங்கட்கிழமை, மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் ஒரு மூடிய அறைக்குள் ஒரு சந்திப்பை நடத்த உள்ளார்.
விஜய்யுடனான சந்திப்பில், 37 குடும்பங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் எனவும், கூட்ட நெரிசலில் காயமடைந்த சிலரும் அடங்குவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சி வட்டார தகவலின்படி, ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் ஊடகங்களுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

