பாகிஸ்தானின் சிறந்த ஈட்டி எறிதல் வீரரான அர்ஷத் நதீமின் நீண்டகால பயிற்சியாளராக இருந்த சல்மான் இக்பால்லுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது
சல்மான் இக்பால் தலைவர் பதவியை வகிக்கும் பஞ்சாப் தடகள சங்கத்தின் அரசியலமைப்பை மீறியதற்காக, தடகள கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. வாழ்நாள் தடையின் கீழ், இக்பால் எந்த தடகள நடவடிக்கைகளிலும் பங்கேற்கவோ அல்லது பயிற்சியாளராகவோ அல்லது எந்த மட்டத்திலும் பதவி வகிக்கவோ முடியாது.
ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட பஞ்சாப் தடகள சங்கத் தேர்தல்களில் இருந்து இக்பால் மீது பாகிஸ்தான் அமெச்சூர் தடகள கூட்டமைப்பு (PAAF) குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.செப்டம்பர் நடுப்பகுதியில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
டோக்கியோவில் நடந்த உலக தடகள சம்பியன்ஷிப்பில் நதீமின் மோசமான ஆட்டத்திற்கு விளக்கம் கேட்டபோது, அரசு நடத்தும் பாகிஸ்தான் விளையாட்டு சபைக்கு இக்பால் அனுப்பிய தெளிவான பதிலுடன் இந்த முடிவு தொடர்புடையதாகத் தெரிகிறது. ஈட்டி எறிதல் வீரரின் பயிற்சி , பயணச் செலவுகள் தொட்ரபான விபரங்கலும் அவரிடம் கோரப்பட்டன.