Monday, October 13, 2025 1:20 pm
டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் முதல் போட்டியாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லாகூரில் நடைபெறவுள்ள முதல் டெஸ்டில், 38 வயதான மூத்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆசிஃப் அஃப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு 198 விக்கெற்களை வீழ்த்தியதால் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் சாஜித் கானுக்கு வைரஸ் தொற்று காரணமாக அணியில் இருந்து வெளியேறியதால் ஆசிஃப் அஃப்ரிடி அணிக்குள் வந்துள்ளார்.
முதல் போட்டியின் விளையாடும் லெவனில் சேர்க்கப்படாவிட்டாலும், அடுத்த போட்டியில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

