கரூரில் நடந்த கூட்டநெரிசல் சம்பவத்தை காரணம் காட்டி ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த மாதம் 27ம் திகதி நடந்த தவெக பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பிரச்சார கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் பொலிஸார் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திரா வரை எதிரொலித்து வருகிறது.
ஆந்திரா முன்னாள் முதல்வரும், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, அனகாப்பள்ளி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி ஒன்றை திறந்து வைக்க நாளை செல்கிறார். இதற்காக விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்லும் ஜெகன்மோகனுக்கு அங்கு ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டது.