இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்றவர்களில் ஒருவரான பிரெட் ராம்ஸ்டெல் என்பவரை தற்போது தொடர்பு கொள்ள முடியாமல் நிர்வாக குழு தவித்து வருகிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தில் அவர்களின் புதிய படைப்புகளுக்காக மேரி பிரன்கோவ், ஷிமோன் சகாகுச்சி ஆகியோருடன் சேர்ந்து இந்த ஆராய்ச்சியாளரையும் நோபல் பரிசு குழு கௌரவித்துள்ளது.
இருப்பினும், ஆஃப்-தி-கிரிட் ஹைகிங் பயணத்தின் போது ராம்ஸ்டெல்லின் டிஜிட்டல் டிடாக்ஸ் செய்து வருவதால், நோபல் குழுவாலும், அவரது சகாக்களாலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளது.