ஐ.நா. தடைகளை மீண்டும் விதிப்பதற்கான “ஸ்னாப்பேக்” பொறிமுறையைத் தூண்டும் நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரான்ஸ், இங்கிலாந்து ,ஜேர்மனி ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் எந்தத் திட்டமும் இல்லை என்று வெளியுறவு அமைச்சுச் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி திங்களன்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் சமீபத்திய ஈரான் எதிர்ப்பு நடவடிக்கையின் “தாக்கங்கள் மற்றும் விளைவுகளை” ஈரான் பரிசீலித்து வருவதாக தெஹ்ரானில் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பகாயி கூறினார்.
“அரசாங்கம் எப்போது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறதோ அப்போதுதான்” ஈரான் ராஜதந்திரம் குறித்து முடிவு செய்யும் என்று அவர் கூறினார், எந்தவொரு பேச்சுவார்த்தையும் நாட்டின் தேசிய நலன்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
“ஈரான் ஒருபோதும் பேச்சுவார்த்தைக்காகக் கெஞ்சாது” என்று பகாயி கூறினார், பேச்சுவார்த்தைகள் இருவழி செயல்முறை என்றும், அது தேசிய நலன்கள், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.
செப்டம்பர் மாதத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடை நிவாரணத்தை நீட்டிக்கத் தவறியதை அடுத்து, வாஷிங்டனுடன் ஒருங்கிணைந்து ஐரோப்பிய நாடுகள் மூன்றும் ஓகஸ்ட் மாதத்தில் ஸ்னாப்பேக் பொறிமுறையைப் பயன்படுத்தினர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஈரான் இந்த மூன்று நாடுகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது, முக்கியமாக அதன் அணுசக்தி திட்டம் மற்றும் தடைகள் நிவாரணம் குறித்து கவனம் செலுத்தியது.