அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் , இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
2019 க்குப் பிறகு ஒரு பாகிஸ்தான் பிரதமர் ஓவல் அலுவலகத்திற்கு வருவது இதுவே முதல்முறை என்பதால், அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சமீபத்திய ராஜதந்திர உறவு மேம்பாட்டை இது சுட்டிக்காட்டுவதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.
எனினும், சந்திப்பிற்கு முன்னதாக அவர்கள் ஒரு மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வாரம் ஐநா பொதுச் சபையின் இடையே நடந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்த வியூகத்தைப் பற்றி விவாதிக்க ட்ரம்ப்பைச் சந்தித்த அரபு அல்லது முஸ்லிம் நாடுகளின் உயர்மட்ட தலைவர்களில் ஷெரீஃபும் ஒருவர் ஆவார்.