விஸா திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், வசதி படைத்த தனிநபர்களுக்கும், , நிறுவனங்களுக்கும் கோல்ட் கார்ட் விஸா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, தனிநபர்கள் $1 மில்லியன் கட்டணம் செலுத்தி அமெரிக்காவின் நிரந்தர வசிப்பிட அட்டையை (கிரீன் கார்டு) பெறலாம்.
அதேபோல், நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஸ்பான்சர் செய்வதற்காக, ஒரு ஊழியருக்கு $2 மில்லியன் செலுத்த வேண்டும்.
இந்த புதிய திட்டம், Eப்௧ , EB-2 எனப்படும் வேலை அடிப்படையிலான கிரீன் கார்டு வகைகளுக்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அமெரிக்க கருவூலத்திற்கு பில்லியன் கணக்கான டொலர் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் 80,000 விஸாக்கள் வழங்கப்படும். அனைத்து விண்ணப்பதாரர்களும் வழக்கமான பின்னணி சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இந்த திட்டம் உலகின் மிகவும் திறமையான மற்றும் பணக்கார நபர்களை ஈர்க்கும் அதே நேரத்தில், சட்ட மற்றும் நெறிமுறை விவாதங்களையும் தூண்டியுள்ளது.
கோல்டன் விஸா திட்டங்கள் மற்ற நாடுகளில் இருந்தாலும், இது விசாக்களை விற்பனை செய்வது போன்றது என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.