வெளிநாடுகளில் பணிபுரியும்போது இறக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை 600,000 ரூபாவிலிருந்து 2 மில்லியன் ருபாயாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு மூலம் வெளிநாடு செல்லும் எந்தவொரு இலங்கை தொழிலாளிக்கும் இந்த இழப்பீடு பொருந்தும்.
ஓகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 5.2 பில்லியன் டொலரை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர் .
இந்த ஆண்டு இதுவரை சுமார் 220,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேற்கொண்டுள்ளனர், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பணம் அனுப்புவது 7 பில்லியன்டொலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7.5 பில்லியன் டொலராக அதிகரிக்கக்கூடும் என்றார்.
Trending
- சீனப் பிரஜை சடலமாக மீட்பு!
- ரோபோசங்கருக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
- புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!
- சவுதி-பாகிஸ்தான் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம்
- 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
- வாகன இறக்குமதி மூலம் சுங்கத்துறை 430 பில்லியன் ரூபா வரி வருவாய்
- நுண்கடன் காரணமாக மண்முனை பகுதியில் 22 பேர் தற்கொலை!
- ஆசியக்கிண்ண சூப்பர் 4 இல் 21 ஆம் திகதி இந்தியா பாகிஸ்தான் மோதல்