அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட 18 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
இதுவரை காலமும் 32 நாடுகள் உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடின. 2026 ஆம் ஆண்டு 48 நாடுகள் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட உள்ளன. உலகெங்கிலும் நடைபெறும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
வட அமெரிக்கா (CONCACAF) – அமெரிக்கா, கனடா, மெக்சிகோ
ஆசியா (AFC) – ஜப்பான், ஈரான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஜோர்தான், உஸ்பெகிஸ்தான்
ஓசியானியா (OFC) – நியூசிலாந்து
தென் அமெரிக்கா (CONMEBOL) ஆர்ஜென்ரீனா, பிறேஸில், ஈக்வடார், உருகுவே, பராகுவே, கொலம்பியா
ஆப்பிரிக்கா (CAF) – மொராக்கோ, துனிசியா ஆபிரிக்க நாடான மொராக்கோ முதன் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.