Monday, September 15, 2025 12:15 am
இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் சுமார் 300,000 பேர் காஸா நகரத்தை விட்டு வெளியேறியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலின் இராணுவ வானொலி ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், முக்கியமாக வடக்கு காஸா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 68 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக வும், 346 பேர் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

