துபாயில் நடந்த ஆசியக்கிண்ண கிறிக்கெற் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதித்து விளையாடிய நடப்பு சம்பியனான இந்தியா 9 விக்கெற்களால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 15 போட்டிகளின் பின்னர் இந்தியா நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 13.1 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 57 ஓட்டங்கள் எடுத்தது. 58 ஓட்ட இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 4.3 ஓவர்கலில் ஒரு விகெற்றை இழந்து 60 ஓட்டங்கள் எடுத்தது.
ஐக்கியாரபு எமிரேட்ஸின் அலிசான் சராஃபு 22 ஓட்டங்கலும், கப்டன் முகமது வாசிம் 19 ஓட்டங்கலும் எடுத்தனர். எடுத்தனர். இந்திய அணிக்கு குல்தீப் யாதவ் 4, சிவம் துபே 3 விக்கெட்டுகளும்,பும்ப்ரா, அலெக்ஸ் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் எடுத்தனர்.
57 என்ற இலக்குடன் களம் இறங்கினார்கள் இந்திய வீரர்கள். அபிஷேக் சர்மா 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 20, கப்டன் சூரியகுமார் 7 ஓட்டங்கள் 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரை விளையாட வைக்குமாறு அனைத்தும் முன்னாள் வீரர்களும் அறிவுறுத்தினார்கள். ஆனால் கடைசி வரை பெஞ்சில் அமர வைத்த இந்திய அணிக்காக இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைத்ததும் அபாரமாக பந்து வீசி 2.1 ஓவர்களில் 7 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெற்களை வீழ்த்தினார். 7 வருடங்கள் கழித்து ஆட்டநாயகன் விருதை வென்றார் குல்தீப்.
இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இருந்ததால் தொடர்ச்சியாக வாய்ப்புகளை பெறாத அவர் கடைசியாக 2018ஆம் ஆண்டு ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இந்நிலையில் இப்போட்டியில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் உட்பட 4 விக்கெட் எடுக்க சரியான லென்த்தில் பவுலிங் செய்ததே காரணம் என்று குல்தீப் தெரிவித்துள்ளார்.