கேரளாவில் பாரில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து ஐடி ஊழியர் காரில் கடத்தி தாக்கப்பட்ட வழக்கில் லட்சுமி மேனன் உடன் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அண்மையில் பார் ஒன்றில் தகராறு நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகை லட்சுமி மேனனனும் மேலும் மூவரும் சேர்ந்து ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவரை காரில் கடத்திச் சென்று தாக்கி உள்ளனர்.
ஐடி ஊழியர் அளித்த புகாரின் பேரில் லட்சுமி மேனனுடன் இருந்த மிதுன், அனீஷ் மற்றொரு பெண் ஆகிய 3 பேரை எர்ணாகுளம் வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரை விசாரணைக்கு பொலிஸார் அழைத்த நிலையில், லட்சுமி மேனன் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.