ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் முதல் கட்டமாக அரசாங்கம் பெரிய அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் செப்ரெம்பரில் தொடங்கும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 2 ஆம் திகதி தொடங்கி, வன்னிப் பகுதியில் ஒரு புதிய “தேங்காய் முக்கோணம்” ,யாழ்ப்பாணத்தின் மண்டைதீவில் ஒரு சர்வதேச விளையாட்டு வளாகத்தை நிறுவுதல் உள்ளிட்ட வளர்ச்சி நடவடிக்கைகள் வடக்கு மாகாணத்தில் நடைபெறும்.
கச்சேரியில் தற்போதைய செயல்முறையை மாற்றுவதற்கு ஒரு புதிய ஒன்லைன் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் யாழ்ப்பாணவாசிகளுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இந்த முயற்சிகள் தேசிய அளவிலான மேம்பாட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாகும் என்று அமைச்சர் கூறினார்.