இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டு மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை மீட்க 14 பேர் கொண்ட மீனவர்கள் குழு மீன்பிடி விசைப் படகில் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டுள்ளது.
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு மீட்கப்படாமல் உள்ள ஏழு மீன்பிடி விசைப் படகுகளை ஆய்வு செய்து மீட்டு தாயகம் எடுத்து வருவதற்காக 14 பேர் கொண்ட மீனவக் குழு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை நோக்கி மீன்பிடி படகில் புறப்பட்டு சென்றனர்.
ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து கடந்த 2022-23 ஆகிய ஆண்டுகளில் மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் எல்லை தாண்டிய வழக்கில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் 2023 ஆம் ஆண்டு ஏழு படகுகள் விடுவிக்கப்பட்டது.. அந்த படகுகளை மீட்பதற்காக படகின் உரிமையாளர்கள் இந்திய இலங்கை அரசிடம் மனு அளித்திருந்தனர்.
ஆனால் அதற்கிடையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மீனவர்களின் மனு பரிசீலிக்க படாமல் இருந்தது வந்த நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை கடந்த வாரம் மீன்பிடி படகுகளை படகின் உரிமையாளர்கள் மீட்டு தாயகம் எடுத்து செல்ல அனுமதி அளித்தனது.
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை செய்யப்பட்ட ஏழு படகுகளை பார்வையிட்டு திரும்ப எடுத்து வருவதற்காக இன்று ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தலைமையில் படகு உரிமையாளர்கள் என 14 பேர் கொண்ட குழு விசைப்படகு ஒன்றில் இலங்கை யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட மீனவர்கள் குழுவை மீன்பிடி படகுடன் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை கடற்படை வசம் ஒப்படைக்க உள்ளனர்.
ஒப்படைக்கப்படும் மீனவர்கள் யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று மாலை வந்து அங்கு நிற்கும் ஏழு படகுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்வர்.
படகுகள் மீட்கும் நிலையில் இருக்கும் பட்சத்தில் படகை மீட்டு வரவும், எஞ்சின் கோளாறு காரணமாக மீட்க முடியாமல் கடலில் மூழ்கிய படகுகளை தமிழகத்திற்கு எடுத்து வருவதற்கான பணிகள் தொடர்பாக இந்த குழு ஆய்வு செய்ய உள்ளது.
இவர்கள் இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கி படகுகளின் தரம் மற்றும் உறுதி தன்மை, இன்ஜின்களில் ஏற்பட்ட பழுது குறித்து ஆய்வு செய்து மீண்டும் ராமேஸ்வரம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
- மீண்டும் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள்
- வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு : விசாரணை திகதி அறிவிப்பு
- கொழும்பு பங்குச் சந்தை சிறியளவில் வீழ்ச்சி
- இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
- டயனா கமகேவிற்கு ஒரு கோடி ரூபாய் சரீர பிணை
- ரணிலுக்காக ஒன்றுகூடிய எதிர்க்கட்சியினர்
- பூண்டுலோயா லயன் குடியிருப்பில் தீ விபத்து : 10 வீடுகள் சேதம்
- காஸா மருத்துவமனையில் தாக்குதல்: 3 பத்திரிகையாளர்கள் உட்பட 15 பேர் பலி
Previous Article108 சோடிகளுக்கு செவ்வாயன்று ஒரே மேடையில் திருமணம்!
Related Posts
Add A Comment
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
© 2025 Eekan Media . Designed by Akkenum Interactive.