காசஸாவில் முதல் முறையாக பஞ்சம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் , பாலஸ்தீனக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் அவுஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்
பிரிஸ்பேனில் , “வரலாற்று சிறப்புமிக்கது” என்று வர்ணித்த பேரணிக்கு குறைந்தது 50,000 பேர் கூடியிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் மதிப்பிட்டனர், குயின்ஸ்லாந்து பொலிஸ் இந்த எண்ணிக்கையை 10,000 என்று கூறியுள்ளது.
இஸ்ரேலுடனான அவுஸ்திரேலியாவின் ஆயுத வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், தடைகளை விதிக்கவும் கோரி பேரணி நடத்தியவர்களுக்கு விக்டோரியன் டிரேட்ஸ் ஹால் கவுன்சில், யூனியன்ஸ் நியூ சவுத் வேல்ஸ், ஹண்டர் வொர்க்கர்ஸ், யூனியன்ஸ் டபிள்யூஏ மற்றும் சவுத் கோஸ்ட் லேபர் கவுன்சில் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்தன.