குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) சம்மன் பெறுவதற்கு ஒரு நாள் முன்பு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐஎன்சி) மூத்த தலைவர் சசி தரூரை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரியும் கலந்து கொண்டார்.
முன்னாள் இந்திய அமைச்சரான தரூர், ஐஎன்சியின் முக்கிய நபராகக் கருதப்படுகிறார். வரவிருக்கும் இந்திய பொதுத் தேர்தலில் ராகுல் காந்திக்குப் பதிலாக ஐஎன்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளராக அவரை நிறுத்துவதற்கான திட்டங்கள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்க இராஜதந்திரிகள் குழு ஓகஸ்ட் 28 அன்று விக்கிரமசிங்கவை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அவர்களின் அடையாளங்கள் மற்றும் சந்திப்பின் நோக்கம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நேபாளம் , இந்தியா ஆகிய நாடுகளுக்கு ரணில் விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஹோட்டல் ஒன்றின் பிரமாண்ட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவரது நேபாள பயணம் இருந்தது, அதே நேரத்தில் இந்திய விஜயம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
