பாகிஸ்தான் கிறிக்கெற் அணியின் முன்னாள் கப்டன் வசிம் அக்ரம், தான் இதுவரை பந்து வீசிய கடினமான பேட்ஸ்மேன் பற்றி மனம் திறந்து பேசுகையில், தான் எதிர்த்து விளையாடிய முதல் ஐந்து கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டார்.
இங்கிலாந்து ஜாம்பவான்களான மைக்கேல் வாகன், சேர் அலஸ்டர் குக், டேவிட் லொயிட் , பில் டஃப்னெல் ஆகியோருடன் உரையாடிய அக்ரம், தனது 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையின் சிறப்பம்சங்களைப் பற்றிப் பேசினார்.
“நான் பந்து வீசிய சிறந்த பட்ஸ்மன் யார் என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்பார்கள். சேர் விவியன் ரிச்சர்ட்ஸ். அவரது பட்டிங் மட்டுமல்ல – அது அவர் சுமந்து வந்த முழு திறமையும், கவர்ச்சியும் தான்,” என்று அக்ரம் கூறினார்.
அலன் போர்டர், கிரஹாம் கூச், சச்சின் டெண்டுல்கர் , பிரையன் லாரா ஆயோரையும் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அடம் கில்கிறிஸ்டை மட்டும் குறிப்பிட்டு, தான் எதிர்கொண்ட சில கடினமான போட்டிகளையும் அக்ரம் நினைவு கூர்ந்தார்.
ரிக்கி பாண்டிங்கிற்கு எதிராக மிகவும் அரிதாகவே விளையாடினேன், ஆனால் ஒருநாள் போட்டிகளில், அடம் கில்கிறிஸ்ட் என்னை மிகவும் தொந்தரவு செய்தவர்” என்று அவர் ஒப்புக்கொண்டார்.