தமிழ் சினிமாவில் இரண்டு பெரும் ஆளுமைகளாக இருந்துவரும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் , உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் நான் சில நடிகர்களின் ரசிகர்களின் சண்டை, அந்த காலம் முதல் இந்த காலம் வருகிறது. அந்த காலத்தில் சிவாஜி எம்ஜிஆர் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் இவர்களுடைய ரசிகர்கள் அதிகமாக மோதிக் கொள்வார்கள். அதற்குப் பிறகு ரஜினி, கமலுடைய ரசிகர்களும் மோதி வந்தனர். இப்போது அஜித், விஜய் ரசிகர்கள் அதே போட்டி போல போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ட நடிகர்கள் எல்லோருமே நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். இதை பல மேடைகளில் அவர்கள் சொல்லிக் கொண்டு இருந்தாலும் ரசிகர்களின் அக்கப்போருக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இவர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இணைந்து நடிக்கக்கூடாது என முடிவெடுத்தனர் என்று கூறப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக இருவரும் இணைந்து நடிக்காமல் இருந்து வந்தனர்.