நீண்ட காலமாக தாமதமாகி வரும் நானுஓயா ரயில் நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும், தனியார் துறையின் ஆதரவைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அவ்வப்போது நிறுத்தப்பட்டிருந்த இந்தத் திட்டம், உள்ளூர் , வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
நானுஓயா – நுவரெலியா புகையிரதப் பாதையால் அருகில் உள்ள சமூகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
“கனவு இலக்கு” திட்டத்தின் கீழ், நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று அமைச்சர் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.