தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் புதிய தலைவராக மூத்த பத்திரிகையாளர் தயா லங்காபுர நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவி காலியாகி கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்த நியமனம் வந்துள்ளது. பல சிவில் சமூகக் குழுக்கள், ஊடக அமைப்புகள் , ஆர்வலர்கள் ஆணைக்குழுவின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக ஒரு நியமனத்தை வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வலியுறுத்தினர்.
ஊடகத் துறையில் ஒரு மூத்த நிபுணரான லங்காபுர, பல்வேறு மூத்த ஆசிரியர் பதவிகளில் பணியாற்றியுள்ளார். மேலும், இலங்கையில் ஊடக சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமையை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.