விடுமுறை நாட்களில் மாசுபட்ட தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் லெப்டோஸ்பிரோசிஸ் (எலிக்காய்ச்சல்) அதிகரிப்பதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் டொக்டர் தீபால் பெரேரா, எச்சரிக்கிறார்.
நீண்டகால காய்ச்சல், கண் சிவத்தல், வயிற்று வலி மற்றும் அடர் நிற சிறுநீர் ஆகியவை அறிகுறிகளாகும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இந்த நோய் சிறுநீரக சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.