புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடைகர் மதன் பாப் நேற்று காலமானார்
மதன்பாப் ஒரு இசைக் கலைஞர், நகைச்சுவை,குத்துச் சண்டை வீரர், நடிகர் என பல்வேறு அவதாரங்கள் கொண்டவர். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர். பாலுமகேந்திராவின் நீங்கள் கேட்டவை படம்தான் இவரது முதல் படம். ஆனால் இயக்குநர் கே.பாலச்சந்தரால் இவரது தனித்துவமான காமெடித் திறமை அடையாளம் காணப்பட்டு வெள்ளித் திரையில் பிரபலமானார்.
சினிமாவில் அவர் பிரபலமாக அவரது சிரிப்புதான் முக்கியக் காரணம். தனித்துவமான சிரிப்பு மற்றும் காமெடியால் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். சிரிப்புக்காகவே பிரபலமான குமரிமுத்து போல, மதன் பாப்பின் சிரிப்பும் தனித்துவமானதாக இருந்ததால் அவர் வேகமாக பிக்கப் ஆகி விட்டார்.
வானமே எல்லை, தெனாலி, தேவர் மகன், பிரண்ட்ஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் மதன் பாப். மதன்பாப் மற்றும் வடிவேலு இடம் பெற்ற பல படங்களில் அவருக்கு மிகப் பெரிய பெயர் கிடைத்தது. அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.