” காஸாவில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையை” முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் “கணிசமான நடவடிக்கைகளை” எடுக்காவிட்டால், செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஐக்கிய இராச்சியம் அங்கீகரிக்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் செவ்வாயன்று தெரிவித்தார்.
டவுனிங் தெருவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர்,
காஸாவில் போர் நிறுத்ம், மேற்குக் கரையில் பிரதேசத்தை இணைப்பதை நிறுத்துவதற்கான உறுதிமொழி இரு நாடுகள் தீர்வை உள்ளடக்கிய ஒரு அமைதி செயல்முறையை நோக்கிச் செயல்படுவதற்கான உறுதிமொழி உள்ளிட்ட பல நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்காவிட்டால், செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக இங்கிலாந்து அங்கீகரிக்கும் என்றார்.
“இதற்கிடையில், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எங்கள் செய்தி மாறாதது மற்றும் தெளிவானது. அவர்கள் உடனடியாக அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும், போர்நிறுத்தத்தில் கையெழுத்திட வேண்டும், நிராயுதபாணியாக்க வேண்டும். காஸா அரசாங்கத்தில் அவர்கள் எந்தப் பங்கையும் வகிக்க மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று ஸ்டார்மர் கூறினார்.